Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாதந்த சம்பளமானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதிக்கு முன்னரே வழங்கப்பட வேண்டும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
'மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை மற்றும் ஸ்ரீ லங்கா அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழுள்ள தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளமானது 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகவே வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நியதி உள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் கீழ் இயங்கும் சில தோட்ட நிர்வாகங்கள், தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தை 16ஆம் திகதி வழங்கியிருப்பது சட்டத்துக்கு முரணானதாகும்' என்றும் இ.தொ.கா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீ லங்கா அரச பெருந்தோட்டயாக்கம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால்;, அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அவர்களுக்குரிய சலுகைகளில் பாரபட்சம் காட்டப்படுகின்றன. முறையான சம்பளத்தை நிர்வாகங்கள் குறித்த திகதிகளில் வழங்காமல் உள்ளன. குறிப்பாக, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளான மாத நடுப்பகுதியில் பங்கீட்டு முறையில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் அல்லது அதற்குரிய கொடுப்பனவுகள், பிரசவ சகாயநிதி மற்றும் சேவைக்காலப்பணம் போன்றவற்றை வழங்குவதில் நிர்வாகங்கள் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றன.
இந்த கொடுப்பனவுகள் முப்பது நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற நியதி இருக்கும் நிலையில் தோட்ட நிர்வாகங்கள் தாம் நினைத்தவாறு இவ்விடயத்தில் அக்கறையற்றவர்களாக இருப்பது கவலையளிக்கின்றது. இதனை, எம்மால் அனுமதிக்க முடியாது. இதற்கு உரிய நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்ள வேண்டும்' என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீ லங்கா அரச பெருந்தோட்டயாக்கம் என்பன அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களாகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026