Kogilavani / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களை, இன்று வியாழக்கிழமை பணிக்குத் திரும்பமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டாமெனவும் தொழிலாளர்களை இ.தொ.கா. வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், இ.தொ.க வின் தலைவர் முத்து சிவலிங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேலும் கூறியதாவது,
'1000 ரூபாய் சம்பளைத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கடந்த 10 நாட்களாக மலையத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தன்னிச்சையாகவே முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் இருவாரங்களின் பின்னர், தீபாவளி பண்டியையும் கொண்டாடப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டால் தீபாவளி தினத்தன்று பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்திற்கொண்டுதான், இ.தொ.கா. தொழிலாளர்களை பணிக்குத் திரும்புமாறு கோருகின்றது' என அவர் கூறினார்.
இதேவேளை, 1,000 ரூபாய் சம்பளத்தைக் கோரி, தமிழர் முற்போக்கு கூட்டணியால் இன்று வியாழக்கிழமை (06), தலவாக்கலையில்; பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago