2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

'ஆளுங்கட்சியின் நல்ல விடயங்களுக்கு ஒதுழைப்பு வழங்குவேன்'

Kogilavani   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொரிஸ் என்டனி

'சப்ரகமுவ மாகாணசபையில் ஆளுங்கட்சி மேற்கொள்ளும் நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்' என இன்று(23) சபரகமுவ மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக பதவி டபிள்யூ.எஸ்.சோமதாச தெரிவித்தார்.

'நான் 14 வருடங்களாக சபரகமுவ மாகாண சபையின் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியின் சகல வெற்றி தோல்விகளின்போதும் நான் கட்சியுடனே இருந்துள்ளேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கட்சியும் என்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாத விதத்தில் நம்பிக்கையுடன் மக்களுக்காக சேவையாற்றுவேன்' என்றும் அவர் கூறினார்.

மாகாண சபையின் மூலம் மக்களுக்கு பாரிய அளவில் சேவையாற்ற முடியும். மாகாணசபையில் ஆளும்கட்சி மேற்கொள்ளும் ; நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் எதிர்க்கட்சியின் கடமையை சிறந்த முறையில் மேற்கொள்வேன்' எனவும் அவர் கூறினார்.   

இவ்வைபவத்தில் சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபை உறுப்பினர்களான அசோக ஜயவர்தன, சபரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிஹால் பாருக் மற்றும் பலர் கலந்துகொண்டனர


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .