Kogilavani / 2017 மே 01 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
'மலையக மக்களுக்கு மேலும் பல உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை, மலையகப் பிரதிநிதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக அவரது இலங்கை விஜயத்தை, தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தக்ககூடாது” என்று, விடியல் அமைப்பு வழியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் எம்.மோகன்ராஜ் வெளியிட்டுள்ள உடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
“மலையக பெருந்தோட்ட மக்கள், இந்தியாவுடனான தொப்புள் கொடி உறவைக்கொண்டவர்கள். அம்மக்கள், இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ளப் போதிலும் இம்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.
தேயிலை தொழிற்றுறையை மட்டுமே நம்பி வாழும் இம்மக்கள், அடிப்படை வசதிகள், பொருளாதார உள்ளிட்ட பல விடயங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒருவாய்ப்பாக இந்திய பிரதமரின் விஜயத்தை மலையக பிரதிநிதிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago