Gavitha / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
“மலையத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ள புதிய அரசியல்வாதிகள், ஆறுமுகன் தொண்டமானை குறைக்கூறியே, அரசியலை நடத்தி வருகின்றனர்” என, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் ஆட்சி மாற்றம் காரணமாக கிடைத்த அதிர்ஷ்டத்தை, ஆறுமுகன் தொண்டமானைக் குறை கூறுவதற்காகவே சிலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆட்சியில் இருக்கும் காலத்தில், தான் சார்ந்த சமூகத்துக்கு எந்த நன்மைகளையும் செய்ய திராணியற்ற இவர்கள், அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, இவ்வாறான விதண்டாவாதங்களை பேசி, காலத்தை கடத்துகின்றனர்” என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“பண்டாரநாயக்க சர்வதேச மநாட்டு மண்டபத்தின் வாயிலில், மாடுகளைக் கட்டி கண்காட்சி நடத்தியது மட்டுமல்லாது, இலங்கையின் ஜனாதிபதி மாளிகைக்கு, தோட்டத் தொழிலாளர்களின் மாடுகளைக் கொண்டுச் சென்று அங்கு, ஜனாதிபதி தம்பதியரின் கரங்களால் பொங்கல் வைக்கச் செய்து, அதனை மாடுகளுக்கு ஊட்டவைத்து, தழிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் ஆறுமுகன் தொண்டமான்.
மலையக மக்களுக்கு வீடமைப்பு அவசியமாகும். ஆனால், தற்போது கட்டப்படுகின்ற வீடுகள் உறுதியற்ற தன்மையுடனேயே கட்டப்படுகின்றன. ஒரு தோட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மழை பெய்தால், அங்கு புதிததாக கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் ஆற்றங்கரைக்கே வந்துவிடும் நிலையே காணப்படுகின்றது.
தோட்டங்களில் வீடமைத்ததும், வீதி அமைத்ததும், விளையாட்டு மைதானம் அமைத்ததும் பாடசாலை அமைத்ததும், மின்சாரம் கொடுத்ததும், தொழிற்பயிற்சி கல்லுரிகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் என அனைத்து வசதிகளையும் இ.தொ.கா, தனது வல்லமையால் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிலர் வெட்டி வீராப்பு காட்டிக்கொண்டு, மலையக மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தவது மக்களுக்கு தெரியாத விடயமல்ல.
இ.தொ.காவின் பின்னால் அணிதிரண்டுள்ள கூட்டம் கருங்கல்லைப்போன்றது. இ.தொ.காவுக்கு நிகரான சேவையை, மலையக மக்களுக்கு ஒருவரும் செய்துவிடவில்லை என்பதே உண்மை” என்றும் அவர் கூறினார்
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago