Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
“ஊவா மாகாண காணி ஆணையகம் மற்றும் மாகாண பிரதேச செயலகங்கள் மூலம் அரச காணிகள், கடந்த ஐந்து வருட காலமாக, பலருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த போதிலும், அக்காணிகளுக்குரிய குத்தகைப்பணமான 17 கோடியே 91 இலட்சத்து 8 ஆயிரத்து 350 ரூபாய் நிதி, ஊவா மாகாண வருமான வரி திணைக்களத்துக்கு செழுத்தப்படாமலுள்ளது. இதனால், ஊவா மாகாண வருமானவரி திணைக்களத்துக்கு பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று, ஊவா மாகாண சபையின் உறுப்பினர் சமந்த வித்யாரட்ன தெரிவித்தார்.
ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரட்னவின் உத்தியோகப்பூர்வ பதுளை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“பதுளை மாவட்டத்தில் 76,238,855 ரூபாயும் மொனராகலை மாவட்டத்தில் 94,679,495 ரூபாயுமாக 17 கோடியே 91 இலட்சத்து 8 ஆயிரத்து முன்றூற்று ஐம்பது ரூபாய் நிதி ஊவா மாகாண வருமானவரி திணைக்களத்துக்கு செழுத்தப்படாதுள்ளது.
அரச காணி குத்தகை வரி செழுத்தப்படாத பட்டியலில், ஊவா மாகாண மக்கள் பிரதிநிதிகள் பலரின் பெயர்களும் வர்த்தகர்கள் பலரினதும் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஐந்து வருட காலப்பகுதியிலிலேயே மேற்படி நிலுவைப்பணம் செழுத்தப்படாதுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago