2025 ஜூலை 16, புதன்கிழமை

'கார்லி பேக்' பாலம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சுஜிதா

சமூக நலன்புரி அமைச்சினூடாக  1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமர்ஸட்  தோட்ட  கார்லி பேக்  பாலம், இன்று  ஞாயிற்றுக்கிழமை (13) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அடிக்கல் நட்டப்பட்டு கடந்த 3 வருடங்களாக பாலம் புனரமைக்கப்படாமல் இருந்ததால் சமர்ஸட்  தோட்ட  கார்லி பேக் பிரிவு மக்கள், பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்

தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாலமும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் நிர்மாணப்  பணிக்காக  சமர்ஸட் தோட்ட நிர்வாகமும் கார்லி பேக் பிரிவு மக்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில்,  சமர்ஸட் தோட்ட உதவி முகாமையாளர் சுஜீவன் கண்ணா ,  நுவரெலியா பிரதேச செயலக சுபி விடுத்தி உத்தியோகத்தர்  சந்திரலேகன், கிராம உத்தியோகத்தர் , திருமதி. வாசனா ஹேரத் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X