Kogilavani / 2015 நவம்பர் 04 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
சம்பளத்துடன் தீபாவளி முற்பணத்தையும் உடன் வழங்க வேண்டும் என கோரி, இறம்பொடை, வெதமுல்ல் தோட்ட மக்கள் நேற்று (4), தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான தீபாவளி முற்பணம் உரிய நேரத்தில் வழக்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
'மாதாந்த சம்பளத்தையும் தீபாவளி முற்பணத்தையும் தீபாவளிக்கு முன்னதாக கேட்டு இருந்தோம். அவை இன்னமும் கிடைக்கவில்லை. 'தீபாவளிக்கு இன்னமும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் நாங்கள் வீட்டை அழகுபடுத்துவது, உடைகள் வாங்குவது, பொருட்கள் வாங்துவது போன்ற இன்னோரன்ன வேலைகளை எப்படி செய்வது?. இதுவே எமது பிரதான பண்டிகை. எங்கள் பிள்ளைகள் இப்பண்டிகையை கொண்டாட ஆவலாக உள்ளனர். இந்நிலையில், எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.





3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago