Kogilavani / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
சிறுவர்கள் இருவரை தாக்கியது மட்டுமல்லாது, அத்தாக்குதலை வீடியோவாக பதிவுசெய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் இருவரை ஹட்டன் பொலிஸார் புதன்கிழமை (23) கைதுசெய்தனர்.
ஹட்டனில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமது கடையில் பொருட்களை திருடியதாகக் கூறி இவர்கள், சிறுவர்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன் அத்தாக்குதலை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
தாம் தாக்குதலுக்கு உள்ளான காட்சிகளடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்ததால் இச்சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அச்சிறுவர்களின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
3 hours ago