2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

'தந்தையின் சொற்படி நடப்பதே சசிந்திரவுக்கு சிறந்தது'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

'நாமல் ராஜபகஷவைப் போன்று, பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடாது, சசிந்திரா ராஜபக்ஷ தனது தந்தையின் சொற்படி நடப்பதே சிறந்தது. இதுவே நான் அவருக்கு வழங்கும் அறிவுரை' என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

இந்நாட்டில், மிக முக்கியமான அரசியல்வாதிகளில் சமல்ராஜபக்ஷவும் ஒருவர். ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர். அத்தகையவரை தந்தையாக பெற்ற சசிந்திர ராஜபக்ஷ, அரசியல் விடயங்கள் தொடர்பில் அவரது ஆலோசனைகளை  பெறவேண்டும்.

இக்கட்சியை மேலும் முன்னேற்றுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என அவர் ஆலோசனைகளை பெறவேண்டும். இதுவே நான் அவருக்கு வழங்கும் அறிவுரை என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .