2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'பிரதேச மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா

'வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே, அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அதிகமாக கடமையாற்றி வருகின்றனர். எனவே, வெளிமாவட்ட ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, பிரதேச மக்களின் பொறுப்பாகும்' என அக்கரப்பத்தனை வைத்தியசாலையின்; வைத்திய அதிகாரி என்.ஜெயராஜன் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் கடமைப்புரியும் ஊழியரொருவர் பிரதேச இளைஞர்கள் இருவரால் தாக்கப்பட்டமையை கண்டித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

'நாங்கள் மகத்தான பணியை செய்துவருகின்றோம். மதுபானம் அருந்திவிட்டுவந்து, அநாகரீகமாக நடந்துகொள்வதை எவ்வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது.

தற்போது, இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள், தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு என்னிடம் கோருகின்றனர். இல்லாவிட்டால் இடமாற்றத்தை பெற்றுச்செல்வதற்கு அனுமதிக்கமாறு கோறுகின்றனர்.

இவ் வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது.  இருக்கின்றவர்களை கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .