Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 14 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
ஜனாதிபதியின் ஆலோசணைக்கமைய கேகாலை மாவட்டத்தில் இடம்பெறும் மது ஒழிப்பு வேலைத் திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும் நிகழ்வு, ஜனாதிபதி செயலக மது ஒழிப்பு பிரிவின் ஊடாக கேகாலை மாவட்ட செயலகத்தில் நேற்று (13) இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாண சபை, கேகாலை மாவட்ட செயலகம், கேகாலை மாவட்ட பிரதேச செயலகங்கள், கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள், கேகாலை மாவட்ட மது ஒழிப்பு திணைக்களம், கேகாலை மாவட்ட கிராமசேவகர் பிரிவுகள், பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற திணைகளங்கள் என்பன இணைந்து இந்த மது ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
இதில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அமைச்சர்களான ரஞ்ஜித் சியம்பலாபிடிய, கபிர் ஹசிம் மற்றும் ஜனாதிபதி செயலகப் பிரிவு அதிகாரிகள், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago