Kogilavani / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி, ஆர்.கோகுலன்
'கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பூனாகலை, மக்கள்தெனிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடுகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மக்களின் பாவனைக்காக உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும்' என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இம்மக்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தொடர்பிலான கலந்துரையாடல், கொஸ்லாந்தையில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடல் தொடர்பில் தொடர்புக்கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'பூனாகலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 72 வீடுகளுக்குமான நிர்மாணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் பூர்த்தியடைந்துவிட்டன' என்றும் அவர் கூறினார்.
கொஸ்லாந்தை மீரியபெத்தையில் கடந்த 2014ஆம் ஆண்டு 29 ஆம் திகதி காலை 7.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால், 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல வீடுகள் மண்ணுள் புதையுண்டன. இச்சம்பவத்தினால் வீடுகள் மற்றும் உறவுகளை இழந்து நிர்க்கதிக்கு உள்ளான 88 குடும்பங்களைச் சேர்ந்த 321 பேர், பூனாகலை தொழிற்சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
.jpg)
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago