Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
'மலையக தமிழர் பெரும் விமர்சையாக கொண்டாடுகின்ற தீபாவளித் திருநாள் இவ்வருடம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை பொறுத்தவரையில் ஒரு சூனியமான தீபாவளி திருநாளாகவே கருத முடிகின்றது' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை மாநில பொறுப்பாளரும் முன்னாள் நகரசபை எதிர்கட்சி தலைவருமான லெ.பாரதிதாஸன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கடந்தகால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கத்தினால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பொருளாதார ரீதியான பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் கடந்த கால அரசாங்கத்தை பார்க்கிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒருபுறம் சம்பள பிரச்சினையில் சிக்குண்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் மறுபுறம் பொருட்களின் விலைவாசியிலும் சிக்கி தவிக்கின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் இதுதொடர்பாக கண்டும் காணாதவர்கள் போல செயற்ப்படுகின்றனர்.
இதேபோல ஏனைய சமூக பிரச்சினைகளும் மந்தகதியில் போகின்ற நிலைமையை காணமுடிகின்றது. தோட்டப் புறங்களிலே மண்சரிவு ஏற்படுகின்றபோது அமைச்சர்கள் சென்று பார்வை இடுவதும் வாக்குறுதிகளை அளிப்பதும் கேலிக் கூத்தாகிவிட்டது.
கடந்த அரசாங்கம் செய்து முடித்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை திறந்து வைப்பதிலே ஆர்வம் காட்டுகின்றார்கள் தவிர புதிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் வழிகளை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.
இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட அரசியல்வாதிகள் மௌனமாக இருப்பது சமூகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தி வருகின்றது. இவ்வாறான நிலை தொடருமானால் வாக்களித்த மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்துக்காக அரசியல் போராட்டம் செய்ய கூடிய நிலை ஏற்படலாம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago