Niroshini / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதீஸ், எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்
“மலையகத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கொண்டுவரபட்டது. இதற்கு யாரும் பெயர் சூட்டி கொள்ளமுடியாது” என, இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெறிவித்தார்.
“கிராமத்து ஒரு பாலம் அமைப்போம்” எனும் வேலைதிட்டத்தின் கீழ் புரனமைக்கப்பட்ட பொகவந்தலாவை - பொகவனை தோட்டத்துக்கு செல்லும் பாலத்தை, நேற்று திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலை அமைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் முலு முயற்சியை முன்னெடுத்தது. இந்திய அரசாங்கத்தினால் புனரமைக்கபட்ட டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பதற்கு இந்தியா நாட்டின் பிரதமர் வருகைதர இருப்பதாக தற்பொழுது உள்ள அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு அறிவிடுகின்றனர்.
இந்தியா நாட்டு பிரதமர் வந்து டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், இந்த வைத்தியசாலை இங்க அமைவதற்கு பாடுபட்டது தற்போது உள்ள அமைச்சர் இல்லை. இந்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்தை நடாத்தி கிளங்கன் வைத்தியசாலையை அமைப்பதற்கு பாடுபட்டது இ.தொ.கா என தெரிவித்தார்.
அதேபோல் 4,000ஆயிரம் வீட்டு திட்டம் குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடாத்தி அதனை பெற்று கொடுத்ததும் இ.தொ.காவே என்றார்.
“தற்பொழுது தோட்டபுறங்களுக்கு குடிநீர் திட்டத்துக்கான நிதிகளும் டரஸ்ட் நிறுவனத்தினால் முன்னெடுக்கபட உள்ளது. அந்த வேலைதிட்டத்தினை பத்தாண்டு திட்டத்தின் ஊடாக நான் அமைச்சராக இருந்த காலபகுதியில் ஆரம்பித்து வைத்ததாகும்.
யார் எந்த குட்டிகரனம் போட்டாலும் யார் கல்நாட்டினாலும், அவை அனைத்துமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்ட பிச்சையே” எனவும் குறிப்பிட்டார்.
57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
3 hours ago