Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பொகவந்தலாவை ஜெபல்டன் பூசாரி டிவிசனைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களைக் குளவிகள் சூழ்ந்து கொட்டியதில் 13 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் இந்தத் தோட்டத்தின் 11ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களைத் திடீரென வந்த குளவிகள் சூழ்ந்து கொட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களைத் தோட்ட நிர்வாகத்தினர் உடனடியாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் 11 பேருக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து வீடு திரும்பினர் .
இதேவேளை, கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் இருவர்
தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .