2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கண்டி சுற்றிவளைப்பில் 21 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று ப்தன்கிழமை அதிகாலை முதல் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பு தேடுதலில் கட்டுகஸ்தோட்டை மற்றும் சுற்றுப்புரங்களில் தேடுதல்களை மேற்கெண்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சாரானாத் சமரகோன் தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்பின்போது நீதிமன்றத்துக்கு ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 19 பேரும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த இருவரும் கைது செய்ததாக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று கண்டி நீதி மன்றம் முன் ஆஜர் செய்வதாகவும் அவர் கூறினார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X