Kogilavani / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பில், சம்பளய நிர்ணயச் சபையில் இன்று (8) நடைபெறவுள்ள விடயத்துக்கு முழுமையான ஆதரவை இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கம் வழங்கும் என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
1,000 ரூபாய் தொடர்பிலான விடயம் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, இ.தே.தோ.தொழிலாளர் சங்கத்தின் இரண்டு வாக்குகளும் ஆதரவாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சில நிபந்தனைகளை தொழில் அமைச்சுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பாக வருடத்தில் 300 நாள் வேலை, 'நோம்' என்ற கிலோகிராம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாதுக் கூடாது என்பவற்றை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் தொடர்பிலான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணயச்சபையில் இன்று (8) 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
56 minute ago