2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’1,000 ரூபாய் கிடைக்காவிடின் போராட்டம் வெடிக்கும்’

Niroshini   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.தி.பெருமாள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கன அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாயாக நிர்ணயிக்காவிடின், தொடர் போராட்டம் வெடிக்குமென, பொகவந்தலாவ தோட்டத்தைச் சேர்ந்த திருமதி அருளப்பன் தெரிவித்தார்.

மஸ்கெலியா நகரில், நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தேர்தல் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்தி தருவதென வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும், அது இன்று வரை நிறைவேற்றபடவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

6 வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டை தமாறி மாறி நிர்வகித்து வரும் அரசாங்கங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளமாக தருவதாக மேடைகள் தோறும் பேசி வாக்குகளை பெற்றன எனத் தெரிவித்த அவர், இருந்தபோதும், பெருந்தோட்ட மக்களின் துயரங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் சாடினார்.

இன்று, நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில், சகல பொருள்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து கொண்டே போவதாகத் தெரிவித்த அவர், தற்போது வழங்கப்படும் வேதனத்தைக் கொண்டு, குடும்ப வாழ்க்கையை வாழ முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X