2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

10 வருடங்களாக பழுதடைந்துள்ள பாலம்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

இரத்தோட்டை- வெரலுகஸ்தென்ன ஆற்றின் உடாக வெரலுகஸ்தென்ன பிரதேசத்துக்கு பயணிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாலமானது, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வெள்ளத்தால் அல்லுண்டுச் சென்ற நிலையில், இதுவரையில் புனரமைப்பு செய்யப்படாமையால் பிரதேசவாசிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

60 வருடங்கள் பழமையான குறித்த பாலமானது, தந்கந்த மற்றும் வெரலுகஸ்தென்ன பிரதேசங்களுக்கு பயணிக்கும் குறுகிய வழியாக காணப்பட்டதுடன்,இதனால் அனைவரும் பயன்பெற்று வந்தனர்.

எனினும் கடந்த 10 வருடங்களாக கவனிப்பாரற்று கிடக்கும் இந்த பாலத்தின் மீதமுள்ள கம்பிகள் திருடர்களால் திருடிச் செல்லப்படுவதாகவும் எனவே இந்த பாலம் முழுமையாக இல்லாமல் செய்யப்படுவதற்கு முன்னர் இதனை புனரமைத்து தருமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X