Kogilavani / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை பகுதியில், இன்று (28) காலை சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து, கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கனரக வாகனமே, கினிகத்தேனை பிட்டவல பகுதியில், களனி ஆற்றுக்கு நீர் வழங்கும் ரம்புக்பத் ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்தில், வாகனத்தின் சாரதி, நடத்துநரே காயமடைந்த நிலையில், நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026