Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 13 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரித்து தருமாறு, பெருந்தோட்ட நிறுவனங்களிடம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதென, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் இடம்பெற்றஆளுநர் மைத்திரி குணரத்னத்தை வரவேற்கும் நிகழ்வில் இன்று (13) கலந்துக்கொண்டப் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த புதிய ஆளுநர்,
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையானது அந்நாட்டில் கலப்படம் செய்யப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு அதிக விலையுடன் ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தேயிலையின் பெருமையை உலக நாடுகளிடையே பரவச் செய்து இலங்கைத் தேயிலைக்கென உரிய விலையை உலக நாடுகளில் பெற்று, இலங்கையின் தேயிலைத் துறையை மீண்டும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து, பாதிப்படைந்துள்ள தேயிலைத் துறையை முன்னேற்ற மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் பிரதிநிதிகளும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago