2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

124 மதுபான போத்தல்களுடன் ஐவர் கைது

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில், அனுமதிப்பத்திரமின்றி மதுபான போத்தல்கள் மற்றும் பியர் டின்களைக் கொண்டுச் சென்ற ஐவர், பொகவந்தலாவை பொலிஸாரால், நேற்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தோட்டப்புறங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, சந்தேகநபர்கள் 124 மதுபான போத்தல்களையும் 48 பியர் டின்களையும் கொண்டு சென்ற போதே, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்க கிடைத்த தகவலுக்கமையவே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு,  பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்,இவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X