R.Maheshwary / 2022 ஜூலை 31 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வான் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 140 லீற்றர் பெட்ரோல், ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றைய தினம் (31) ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 140 லீற்றர் பெட்ரோலை அக்கரப்பத்தனைக்கு கொண்டு சென்ற போதே, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஹட்டன் நகரில் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு பயணிக்கும் வாகனங்கள் இதன்போது திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago