R.Maheshwary / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
தேயிலைக் கொழுந்தை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று, குருவிட்ட- எரத்ன வீதியில் அதியுயர் மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த மின்கம்பம் இரண்டாக உடைந்துள்ளது.
இதனால் 15 கிராமங்களுக்கான மின் 7 மணித்தியாலங்கள் துண்டிக்கபட்டிருந்தாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (21) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த மின்கம்பத்தில் டிப்பர் மோதியிருக்காவிடின் 50 அடி பள்ளத்தில் விழுந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து, அதிசக்தி வாய்ந்த மின்கம்பத்திலிருந்து மின்சாரத்தை துண்டித்த பிறகே, இந்த விபத்தில் சிக்கிய லொறியின் சாரதியும் உதவியாளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .