Ilango Bharathy / 2021 ஜூலை 02 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நடந்து முடிந்த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில்,குறிப்பிட்ட
பாடங்களைக் கொண்டு 15 கல்வி வலயங்களும் தரவரிசைப்படுத்தப்பட்டதாகவும்
இதற்கமைய ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளதாகவும் ஹட்டன்
வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இத் தரவரிசைப்படுத்தலுக்கமைய வில்கமுவ கல்வி வலயம் 70.96 சதவீதத்தினை பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயம் 66.18 சதவீதத்தினை பெற்று இரண்டாம் இடத்தையும்,வலப்பனை கல்வி வலயம் 65.45 சதவீதத்தினைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது என்றார்.
அத்துடன் நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களை கண்டி, மாத்தளை, நுவரெலியா என்பன
பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த தரப்படுத்தலில் உயிரியல் விஞ்ஞானத்தில் கண்டி முதலாம் இடத்தையும், ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், மாத்தளை கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago