2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

200 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து ஓட்டோ விபத்து

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில், இன்று (10) அதிகாலை சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஓட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இவ்விபத்துக்குக் காரணம் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டோ சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார் என்றும் ஓட்டோ முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X