2025 மே 15, வியாழக்கிழமை

200 ரூபாய்க்கு விற்கப்படும் மரவள்ளிக்கிழங்கு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டனில் ஒரு கிலோகிராம் மரவள்ளிக்கிழங்கின் சில்லறை விலை 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஹட்டன் பிரதேசத்தில் மரக்கறிக்களை சில்லறை விற்பனை நிலையங்கள் சிலவற்றில் மாத்திரமே மரவள்ளிக்கிழங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வாறு விற்பனை செய்யப்படும் கிழங்கு பலாங்கொட பகுதியிலிருந்து கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் மரவள்ளிக்கிழங்கு 50 ரூபாய் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கும் வியாபாரிகள், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரவள்ளிக்கிழங்குகள் சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்ளூர் சந்தைகளின் கேள்விகளுக்கு ஏற்ற விநியோகம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

​மரவள்ளிக்கிழங்குக்கான கேள்வி அதிகரிப்பே தற்போது விலை அதிகரிப்புக்கான காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இதற்கு முன்னர் கம்பஹா பகுதியிலிருந்து ஹட்டனுக்கு மரவள்ளிக்கிழங்கு மொத்தமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுடன், தற்போது கம்பஹாவிலிருந்து கொண்டு வரப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளமையும் ஹட்டனில் மரவள்ளிக்கிழங்கு விலை அதிகரிப்புக்கு மற்றுமொறு காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .