2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கட்டுகஸ்தோட்டையில் பொன்சேகாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யக் கோரி கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

ஹாரிஸ்பத்துவ ஐக்கிய தேசியக் கட்சிக் கிளை ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷாபி, எஸ்.எம்.பீ.டி அல்விஸ் பூஜாப்பிட்டிய பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.எம்.கலீல், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள்  எனபெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி வரை நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தினால் கண்டி மாத்தளை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X