2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

Kogilavani   / 2011 ஜூன் 08 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஹல்ஒழுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தீ விபத்தில் அத் தொழிற்சாலை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
 
பட்டாசு தயாரிப்பதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த வெடிப் பொருட்களில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக இத் தீ விபத்து ஏற்பட்டதாக அத் தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தீவிபத்தினால் சுமார் 25  இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தீபால் பிரேமசந்திர தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .