Kogilavani / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(8) வரை நுவரெலியா பாடசாலை மாணவர்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் சலுகை அடிப்படையிலான பயணச்சீட்டுகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற சலுகை அடிப்படையிலான பயணச்சீட்டுகள் அநேகமான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என பெற்றோர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் சுற்று நிருபத்துக்கு அமைய பாடசாலை மாணவர்களுக்கான சலுகை அடிப்படையிலான பயணச்சீட்டுகள் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதிவரை மாத்திரமே வழங்கப்படும். ஆனால் இந்த மாதம் முதலாம், 3,4 ஆம் திகதிகளில் விடுமுறை என்பதனால் அநேகமான பாடசாலை மாணவர்கள் இந்த பயணச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக பெற்றோர்கள் இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் பிராந்திய முகாமையாளர் தசநாயக்கவின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து, நுவரெலியா போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பீ.திசாநாயககவுக்கு எதிர்வரும் 8ஆம் திகதிவரை நுவரெலியா பாடசாலை மாணவர்களுக்கான சலுகை அடிப்படையிலான பயணச்சீட்டுக்களை வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்பதாக பயணச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா கிளையினால், பாடசாலை மாணவர்களுக்காக 2500 பயணச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதம் வழங்கப்பட்டுள்ள பயணச்சீட்டுக்கள் அனைத்தும் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விலை குறைப்பு அடிப்படையில் அன்றி கூடிய விலைக்கு விநியோகிக்கப்படுகின்றது.
இதற்கு காரணம் புதிய விலை குறிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என பயணச்சீட்டு விநியோகத்துக்கு பொறுப்பான ஆர்.எம்.உதயசிரி பண்டார தெரிவிக்கின்றார்.
4 minute ago
4 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 minute ago
19 minute ago
31 minute ago