2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி

Sudharshini   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்கள் அனைத்தும் எதிர்வரும் மே மாதத்துக்குள் நிரப்பப்படும் என சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் நியமனம் வழங்கப்பட்ட முகாமைத்துவ உதவியாளர்களுக்கான செயலமர்வு திங்கட்கிழமை (20) இரத்தினபுரி புஸ்செல்ல பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கடந்த 2013-11-16ஆம் திகதி இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, சப்ரகமுவ மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதுக்கான போட்டி பரீட்சையில், கூடுதலான புள்ளிகளை பெற்றவர்கள் இரு குழுக்களாக தெரிவு செய்யப்பட்டு தற்போது சப்ரகமுவ மாகாண அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்; முதலாவது குழுவிலுள்ள 172 பேரும் இரண்டாவது குழுவிலுள்ள 69 பேரும் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .