2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கல்லூரி மைதானத்தில் திடீரென தோன்றிய குழி

Sudharshini   / 2015 மே 13 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-திருஞானம்

புஸ்ஸல்லாவை இந்து தேசிய கல்லூரி மைதானத்தில் திடீரென 25 அடி ஆழமான குழியொன்று  தோன்றியுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

தற்பொது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இக்குழி தோற்றியுள்ளதாகவும் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலை கட்;டடங்களில் சிறு சிறு வெடிப்புக்கள் ஏற்பட்டுள்;ளதால் மாணவர்கள் அச்சத்துடனேயே பாடசாலைக்கு வந்து செல்கின்றனர்.

இது குறித்து கிராமசேவகர் ஊடாக உடபளாத்த பிரதேச செயலாளருக்கும் அனர்த்த முகாமைத்து நிலையத்துக்கும்; அறிவிக்கப்பட்டதையடுத்து, இப்பகுதியில் சோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .