2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 13 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

மத்திய மாகாணத்தில் பாடசாலைகளை தரமுயர்த்தும் முதலாவது வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை(12) நுவரெலியா சௌமிய கலையரங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பாடசாலைகளுக்கு ஆரம்ப கட்டமாக விஞ்ஞான உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலைக்கவி உபகரணங்கள், வாசிகசாலைக்கு தேவையான புத்தகங்கள், தொழில்நுட்ப ஆய்வுகூட வாசிகசாலைக்கு தேவையான விஞ்ஞான புத்தகங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தில் கட்டபுலா விஞ்ஞான கல்லூரி, பரிசுத்த திரித்துவ விஞ்ஞான கல்லூரி, தலவாக்கலை விஞ்ஞான கல்லூரி, ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரி, இராகலை விஞ்ஞான கல்லூரி, நோர்வூட் விஞ்ஞான கல்லூரி, டிக்கோயா கலைக்கல்லூரி, ஹேதுனுவௌ விளையாட்டு கல்லூரிக்கும்

கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ இராமகிருஸ்ணா விஞ்ஞான கல்லூரி, அபிராமி வத்தேகம விஞ்ஞான கல்லூரி, இரத்தோட்டை விஞ்ஞான கல்லூரி, கம்பளை முத்துமாரி இந்து விஞ்ஞான கல்லூரிக்கும் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இப்பொருட்களை பாடசாலையின் அதிபர்கள் பெற்றுகொண்டனர். இந்நிகழ்வில்,   கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷணன்,  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி உட்பட அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டனர். 

           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .