2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சிமன்ற விவகாரம் எதிர்ப்;பு நடவடிக்கை

Kogilavani   / 2015 மே 14 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய நடைமுறைக்கு எதிராக  பூஜாபிட்டிய பிரதேச சபையின் எதிரக்; கட்சி தலைவர் எஸ்.எம்.கலீல், நேற்று புதன்கிழமை(12) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின்போது எதிர்;ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து அவற்றின் அதிகாரங்களை  விசேட ஆணையாளர் ஒருவரிடம் ஒப்படைப்பதையும் புதிய தொகுதி அடிப்படையில் அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே அவர் மேசையில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

சுமார் 25 வருடங்கள் பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து இன,மத பேதங்களை மறந்து சேவையாற்றியுள்ளோம். புதிய தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் இவை அனைத்தும் துண்டிக்கப்படும்.

இதேவேளை, கல்வி அமைச்சின் மூலம் குருநாகல் மாவட்டத்திலிருந்து புதிதாக இணைத்துகொள்ளப்பட்ட சிற்றூழியர்கள் பலர், இப்பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பூஜாபிட்டிய பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .