2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இ.போ.ச ஊழியர்கள் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 14 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரத்தினபுரி பஸ் டிப்போவில் கடமையாற்றும்  ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை(14) பஸ் டிப்போ கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி பஸ் டிபோவில் கடமையாற்றும் நிறைவேற்று சேவை அதிகாரிகள் மூவர் நீக்கப்பட்டதை கண்டித்தும் பஸ் டிப்போவில் இயங்கி வந்த தொழிற்சங்க காரியாலயம் சீல் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் பிரபாத் மஹேஷ்த அல்விஸ் மற்றும் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் மொஹமட் சியாம் உள்ளிட்ட குழுவினர்களும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .