Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2015 மே 15 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
தலவாக்கலை, லிந்துலை வைத்தியசாலைக்கு வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு பிரதேச மக்கள், வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் நேற்று வியாழக்கிழமை சிகிச்சைக்காக வந்த சுமார் 200இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
கடமையில் இருந்த இரு வைத்தியர்கள் விடுமுறையில் சென்றதால் மாதாந்த சிகிச்சைக்கு வந்த நோயாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். காலை 7 மணிக்கு வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் 10 மணி வரை வைத்தியர்கள் இன்மையால் அவதியுற்றதோடு சிலர் மயங்கியும் விழுந்துள்ளனர்.
இதனால், வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லிந்துலை பொலிஸாரின் தலையீட்டை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இவ்விடயம் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மாதாந்த சிகிச்சைகளை பெறமுடியாத நோயாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (15) சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago