Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2015 மே 15 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
உள்ளூராட்சிமன்றங்களது காலம் முடிவடைவதால் அவை தானாகவே கலைகின்றன என்றும் எந்தவோர் உள்ளுராட்சிமன்றத்தையும் அதிகாரத்தை பயன்படுத்தி கலைக்க முன்வரவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அக்குறணை பிரதேச சபைக்காக எட்டு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டட தொகுதியை நேற்று வியாழக்கிழமை (14) திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இலங்கையில் 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விருப்புவாக்கு முறையினால் அரசியலில் பாரிய ஓட்டைகள் ஏற்பட்டன' என்றார்.
விருப்பு வாக்குமுறையானது நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சிமன்றங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு உறுப்பினர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இன்று சிலர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படுவதாக கோஷம் எழுப்புகின்றனர். சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். எந்த ஒரு உள்ளூராட்சிமன்றமும் அதிகாரத்தை பயன்படுத்தி கலைக்கப்படமாட்டாது.
உள்ளூராட்சிமன்றங்களது காலம் முடிவடைந்ததனால் அவை தானாகவே கலைகின்றன. இது நாட்டின் சட்டத்தின் அடிப்படையிலேயே நடக்கின்றது. எவரும் இதனை தவறு என கூற முடியாது.
கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி முடிவடைந்த உள்ளூராட்சி மன்றங்களது காலத்தை நீடிக்குமாறு சிலர் கோறினர். அதன் பிரகாரம் மே மாதம் 15ஆம் திகதிவரை அதன் காலம் நீடிக்கப்பட்டது. மீண்டும் இதன் காலத்தை நீடிக்க கோருவது முறையற்றது.
ஜனாதிபதியின் பதவி காலத்தை குறைப்பதற்கு இதுவரை யாரும் முன்வந்ததில்லை. ஆனால் நான் அதனை குறைத்தேன். அதேபோன்று நாடாளுமன்றத்தின் காலத்தையும் ஆறு வருடங்களில் இருந்து ஐந்து வருடங்களாக குறைக்க 20ஆம் திருத்த சட்ட மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று நாட்டில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றம் சென்று தன்னை கைதுசெய்வதை தடுக்கும் தீர்ப்பை அதனாலேயே பெற முடிந்தது' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago