Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2015 மே 15 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்திலிருந்து ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களை அம்மாகாணத்துக்குட்பட்ட கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய கஷ்டப் பிரதேசங்களில் காணப்படும் தமிழ் பாடசாலைகளுக்கு இவர்களை நியமிக்குமாறு பின்தங்கிய கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனம் அண்மையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் பாடசாலைகள் வழங்கப்படவில்லை. நியமனம்பெற்ற ஆசிரியர் உதவியாளர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி மாகாண கல்வி அமைச்சின் மூலம் பாடசாலைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எனவே தமிழ் பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்படும்போது பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் தமிழ் பாடசாலைகளின் நிலைமைகளை கவனத்தில்கொண்டு அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் பின்தங்கிய பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை பெற்றுகொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாலையகத்தில் பெரும்பாலான மாணவர்கள் பின்தங்கிய பாடசாலைகளில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்து அதன் பின்னரே நகர பாடசாலைக்கு கல்வி கற்க செல்கின்றனர்.
எனவே, இப்பாடசாலைகளுக்கு தேவையான வளங்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றுகொடுக்கப்பட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago