Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மே 20 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கோர் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் தேர்தல் இடாப்பில் தமது பெயர்களை பதிந்து கொள்ளுமாறும் மலையக மக்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக உப தலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து மேலும் தெரிவிக்கையில்,
'மலையக வரலாற்றில் 2015ஆம் ஆண்டு, முக்கியமான தேர்தல் ஆண்டாக அமையப் போகிறது. ஆகவே மலையக மக்கள் தமது வாக்குரிமையை தக்கவகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பதுளை மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளவில்லை. இந்த நாட்டு பிரஜை என்ற அந்தஸ்த்தையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யவேண்டும்' என்றார்.
'மலையகமெங்கும் உள்ள கிராம உத்தியோகஸ்தர்கள் ஊடாக வாக்காளர்களைப் பதிவுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டஅனைவருமே தமது கிராமசேவை உத்தியோகஸ்தர்களினூடாக வாக்காளர்களாக தங்களைப் பதிவுசெய்து கொள்ளமுடியும்' எனஅவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுற்றுநிரூபங்கள் மாவட்டஃமாநில பிரதிநிதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தேர்தல்கள் செயலகம், பிரதேச செயலகங்கள், கிராமசேவை பிரிவு ஆகியவற்றினூடாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
குறிப்பாக வாக்காளர் அட்டை பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கும் ஏனைய விடயங்களுக்கும் அவசியம் என்பதை பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட அனைத்து மக்களுமே உணர்ந்து கொள்ளவேண்டும்.
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இடம்பெறும் வாக்காளர்பதிவில் மலையக மக்கள் சகலரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago