2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மக்களை வெளியேறுமாறு பணிப்பு: ஹக்கல மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 20 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெல்டன் ஹெட்டியாராச்சி

நுவரெலியா- பதுளை வீதி, ஹக்கல பூங்காவுக்கு சொந்தமான காட்டின் எல்லைப்பகுதியிலுள்ள சுமார் 7 கிராமங்களில் வசிக்கும்; மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, அப்பகுதிமக்கள்,  திங்கட்கிழமை (18) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

சீதாஎலிய பகுதியில் கூடிய 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,000 பேர்;, இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹக்கல காட்டின் எல்லைப்பகுதியில் தாம் மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதாகவும் அது தங்களது பாரம்பரிய வசிப்பிடம் என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை, வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கான நீதிமன்ற உத்தரவு, நாளை வியாழக்கிழமை (21) வரவுள்ளது என்று தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களுக்கான நிலையான வதிவிடம் இல்லாமல் எந்த நம்பிக்கையில் எமது கிராமத்தை விட்டு வெளியேறுவது என்று கேள்வியொழுப்பினர்.

ஹக்கல காட்டின் எல்லையில் வாழ்ந்து வரும் இந்த குடியிருப்பின் காரணமாக, காட்டுப்பகுதியின் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் முக்கியமாகதொரு சூழல் என்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள சுட்டிக்காட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .