Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மே 20 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் ஆஸிக்
சுமார் ஒருகோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அங்கும்புரை, பாடசாலையின் தொழில்நுட்ப ஆய்வுகூட நினைவு கல்லில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரையாவது பெயர்ப்பலகையில் உள்ளடக்காததை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி தெரிவித்துள்ளது.
கண்டி, அங்கும்புரை தேசிய பாடசாலைக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடம் நேற்று செவ்வாய்க்கிழமை(19) திறந்து வைக்கப்பட்டது.
ஆய்வுகூடத்தை தபால்துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்க இருந்த நிலையில், மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் காலை 8.30 மணிக்கே திறந்து வைத்ததுடன் ஊடக சந்திபொன்றையும் ஏற்படுத்தினர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
'பின்தங்கிய பாடசாலைகளை முன்னேற்றும் நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்தோதைய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை அமைத்தார். அந்த வரிசையில் அங்கும்புரை பாடசாலைக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை சேர்ந்த எந்த எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை நான் வன்மையாக கண்டிகின்றேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
'தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் நினைவு கல்லில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரையாவது உள்ளடக்காததையும் நான் வன்மையாக கண்டிகின்றேன். அதனை எதிர்தே நாங்கள் இந்த ஆய்வுகூடத்தை முன்கூட்டியே திறந்தோம்' என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
மேற்படி உறுப்பினர்கள் ஆய்வுகூடத்தை திறந்துவிட்டு சென்ற சுமார் இரண்டு மணித்தியாலத்துக்கு பின், அங்கு வருகை தந்த தபால்துறை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆய்வுகூடத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago