2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Gavitha   / 2015 மே 21 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இரத்தினபுரி வேவல்வத்தை பபரபொடுவ வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வைத்திய பரிசோதனைகளை பெற்று அதற்கான மருந்துகளை இலவசமாக பெற்றுகொள்ளுமாறு சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார தெரிவித்துள்ளார்.

பற்சிகிச்சை, இரசாயன ஆய்வுக்கூடம், கண் பரிசோதனை, மனநல மருத்துவ பரிசோதனை, சர்வாங்க வைத்திய பரிசோதனை, ஆயுர்வேத வைத்திய பரிசோதனை, தொற்றுநோய் பரிசோதனை, உள ஆரோக்கியம் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம், சுகாதாரம் சம்பந்தமாக தெளிவு படுத்தல், குழந்தை மருத்துவம் போன்ற பரிசோதனைகளும் நடாத்தப்படும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .