2025 ஜூலை 05, சனிக்கிழமை

முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்ட சிறுவன் கைது

Gavitha   / 2015 மே 25 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பதென்னை கஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் முன் நிருத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி ஒன்றை, ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை கடத்திச்சென்ற 17 வயதுடைய சிறுவனை, முச்சக்கரவண்டியுடன் கைது செய்ததாக. கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை கடத்திச்செல்லப்பட்ட முச்சக்கரவண்டி, இயந்திரகோலாறு காரணமாக இயங்காமல் நின்றுள்ளது. இது தொடர்பாக அயலவர்கள் பொலிஸாருக்கு தெரியபடுத்தியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளனர்.

இந்;த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .