Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 26 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலமும் ஆத்ச சாந்தி நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை(26) நுவரெலியாவில் நடைபெற்றது.
புனித சவேரியார் கல்லூரிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இப்பேரணி, நுவரெலியா பிரதான வீதி ஊடாக லோசன் சுற்றுவட்டத்தை வந்தடைந்ததுடன் அங்கு இரங்கல் உரையும் சர்வமத வழிபாடுகளும் இடம்பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மேற்கொண்டிருந்தார்.
இவ் ஊர்வலத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான வடிவேல் புத்திரசிகாமனி, மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago