Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 27 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கும்போது, மலையக மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், 'உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்கும்போது பொது நிர்வாக உள்ளூராட்சி அமைச்சு, மலையக மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள் நிர்ணய நடவடிக்கையை மீண்டும் சம்பந்தப்பட்ட அமைச்சு நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
'மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மலையக தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இல்லாமல், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைச்சை வலியுறுத்த வேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'ஒரேநாளில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 12 பிரதேச செயலகங்களை உருவாக்கி 12 பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி தேர்தலாக நுவரெலியா மாவட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதே நடைமுறை மூலம் பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற மலையக மக்கள் வாழும் மாவட்டங்களிலும் புதிய உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்' என அவர் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago