Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 27 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் தொழில்புரிந்துகொண்டிருக்கும்; இளைஞர், யுவதிகளுக்கு எதிர்காலத்தில்; வீடமைப்பு திட்டத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், நேற்று செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி, அவர்களுக்கான வீடமைப்பு திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்மக்களின் நன்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எமது திட்டத்தில் தற்போது அவர்களுக்கான சொந்த வீடு, காணி உறுதி என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
மிக நீண்ட இச்செயற்றிட்டத்தை மட்டுமே தற்போது கருத்தில்கொண்டுள்ளோம். அதனால், அவர்களுக்கான வீடமைப்பு திட்டம் மிக வேகமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. பெருந்தோட்டங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுகொள்ள முடியாமல்; நகர்புறங்களில் தொழில்வாய்ப்பை பெற்று தொழில்புரிந்துகொண்டிருக்கும் இளைஞர், யுவதிகள் தொடர்பிலும் நாங்கள் கவனம் செலுத்தத் தவறவில்லை.
இவர்களது நலனை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் வீடமைப்புத் திட்டங்களை பெற்றுகொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்;' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago