Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 28 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் – டிக்கோயா நகரசபை மேலதிக செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை(28) ஊடகங்களுக்கு எதிராக இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி நகரசபையின் மேலதிக செயலாளர் மற்றும் 28 உத்தியோகத்தர்களில் 25 பேர், புதன்கிழமை கினிகத்தேனை – களுகல பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு சென்றனர்.
புதன்கிழமை(27) பொது மக்களுக்கான சேவை தினம் என்பதால் நகர சபைக்குச் சென்றிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்ததோடு, நகர சபையின் தொழிற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இச்செய்தி ஊடகங்;களில் வெளியானமையால் இதற்கு எதிர்பு தெரிவித்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'ஆணையாளர், நகர தலைவரின் கட்டுப்பாட்டிலேயே நகர சபை செயற்படுகிறது. ஊடகவியலாளர்களின் கீழல்ல', 'எங்களது உரிமைகளில் தலையிட ஊடகவியலாளர்களுக்கு உரிமையில்லை', 'ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர்' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்டம்தொடர்பில் கேட்டபோது,
'ஆர்ப்பாட்டம் தொடர்பில் தங்களுக்கு முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. இன்று காலை தொழிலுக்கு சென்றபோது ஒருதொகை சுவரொட்டிகளையும் பதாகையையும் கையில்கொடுத்த மேலதிக செயலாளர், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும்படி பணித்தார்' என தெரிவித்தனர்.
இதேவேளை, நகரசபை ஊழியர்கள் திருமணத்துக்கு சென்ற விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கியமை தொடர்பில் நகர சபை ஊழியர் ஒருவருக்கு நகர சபையின் டிக்கோயா நகர சபையின் முன்னாள் நகர தலைவர் அழகமுத்து நந்தகுமாரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை(28) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago