2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போலி நிதிசேகரிப்பு: பெண்கள் இருவர் கைது

Kogilavani   / 2015 மே 29 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

சிறுவனொருவனுக்கு சிகிச்சையளிப்பதற்கென கூறி போலி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(29) கைதுசெய்துள்ளனர்.

குருநாகல், கல்கமுவ மீகெலாவ பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிதி சேகரிப்பதற்காக பயன்படுத்திய ஆவணங்களை பொலிஸார் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

சிறுவனொருவனின் முகத்தை காயமடைந்தது போல் மாற்றம் செய்துள்ளதுடன் அச்சிறுவன் தற்போது அநுராதபுரத்தில் சிறுவர் இல்லத்தில் உள்ளதாகவும் அவனை குணப்படுத்த வேண்டும் என கூறியுமே இவ்வாறு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி இருவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அநுராதாபுரம், ஞானகுலம பகுதியிலுள்ள விகாரையில், 1500 ரூபாய் பணம் கொடுத்து நிதி சேகரிப்பதற்கான டிக்கெட் மற்றும் போலியான ஆவணங்களை தயாரித்தாகவும்  நாளொன்றுக்கு 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பணம் சேகரிப்பதாகவும் மேற்படி பெண்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இவ்விருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .