2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 மே 29 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா, கிங்கோரா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன், இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் விஸ்வலிங்கம் (வயது 31) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற இவர்;, வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்றவர்கள், கிங்கோரா நீரோடையில் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் உடனடியாக சடலத்தை மீட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .